கில்லி பட பேனரை பல்லி போல் கிழித்த அஜித் ரசிகர் கைது

சென்னை காசி தியேட்டரில் அஜித்தின் தீனா படம் திரையிடப்பட்ட நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் கில்லி பட பேனரைக் கிழித்த  நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

23 ஆண்டுகளுக்கு பின் ‘தீனா’ படம் டிஜிட்டல் முறையில் நேற்று அஜித்குமார் பிறந்த நாளில் ‘ரீ ரிலீஸ்’ செய்யப்பட்டது.

சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள்.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் ‘தீனா’.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு ‘தல’ என்ற பட்டம் பிரபலமானது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் ‘தீனா’ படம் டிஜிட்டல் முறையில் நேற்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் ‘ரீ ரிலீஸ்’ செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று ‘தீனா’ படம் ஓடிக்கொண்டு இருந்தது.

அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதே போல், சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.