அஜித் படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் அடுத்து இந்த நடிகருடன் கூட்டணி அமைக்கிறாரா?

விக்னேஷ் சிவன் சினிமாவில் போடா போடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இப்போது முன்னணி பிரபலங்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார்.

கடைசியாக நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என 3 பேரையும் வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ஆனால் அப்படம் சரியாக போகவில்லை, இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாக இருந்தது.

பிறகு சில காரணங்களால் இவர்கள் கூட்டணி அமையவில்லை, அஜித் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை புதிய கதைக்காக அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பட கதை ஒரு அதிரடி ஆக்ஷன் கதை என்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்