கொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! – இடைக்கிடையே கால அவகாசம்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதன்படி குறிப்பிட்டளவு கால அவகாசம் இடையிடையில் மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் தம்புள்ளை பொருளாதார நிலையம் உட்படப் பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிக விலைக்குப் பொருட்களை விற்போர் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.