பேருவளையில் மட்டும் 15 பேருக்குக் கொரோனா; 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தல்

களுத்துறை மாவட்டம், பேருவளைப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த  சுமார் 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர்.

அங்கு கொரோனா நோயாளர்கள் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அப்பகுதிகளைச் சேர்ந்த 900 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள ஒருவர் நேற்று கொரோனா தாக்கி உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள 200 பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.