ஊரடங்கு விதிமுறையை மீறினால் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – பொலிஸ் அதிரடி அறிவிப்பு
“ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்வோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.”
– இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாளை (10) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை