கொரோனாவை இல்லாதொழிக்க 22 மில்லியன் யூரோ நன்கொடை – இலங்கைக்கு வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 4 கோடியே 44 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இந்த நிதி செலவிடப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்