கோழி திருடச் சென்றவர்கள் விட்டுச் சென்ற தொலைபேசியினால் சிக்கினர்
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோழிகளை திருடச் சென்ற இருவர் திருடிய இடத்தில் கைத்தொலைபேசியை விட்டுச் சென்றதால் திருடர்கள் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோழி வளர்ப்பாளர் ஒருவரின் கோழிகள் சிலவற்றை இருவர் சேர்ந்து திருடியுள்ளனர். திருடும் போது திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி தவறுதலாக விழுந்துள்ளது. அதனை அறிந்து கொள்ளாத திருடர்கள் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.
கோழி வளர்ப்பாளர் கண்டெடுத்த தொலைபேசி மூலம் அடையாளம் காணப்பட்ட திருடர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை