கொரோனா சந்தேகம்: யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதி!
கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) மாலை தொரிவிக்கையில், “யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 2 நாட்களில் 5 பேர் குறித்த காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் நேற்று அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், இன்று அனுமதிக்கப்பட்ட 3 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகூடத்தின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என பணிப்பாளர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை