திருமலை சிவசக்திபுரத்தில் அடிப்படை வசதியின்றி வாழும் குடும்பம்!

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர்
பிரிவில் உள்ள சிவசக்திபுரம் எனும் கிராமத்தில் அடிப்படை வசதியின்றி ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது.
குடியிருப்பதற்கான நிரந்தர வீடு இன்மை மற்றும் மலசலகூடம் உள்ளிட்ட எதுவுமின்றி அன்றாடம் உழைக்கும் கூலித் தொழில் ஊடாக வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இரு குழந்தைகள் தற்போது தற்காலிக தகரக் கொட்டிலில் வாழ்க்கை மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் இருக்க முடியாது,கோடை காலங்களில் இருக்க முடியாது முற்று முழுதாக அரவே தகரக் கொட்டிலில் இருக்க முடியாது என கண்ணீர் வடிக்கின்றனர் .
நாளாந்த கூலி வேலை காரணமாக தங்களின் தனது இரு குழந்தைகளின் பசிபோக்க வயிறு நிரப்பப்படுகிறது. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அறிவித்தும் தங்களுக்கான நிரந்தர வீட்டு வசதி செய்து கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய கொவிட்19 எனும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தங்களது ஜீவனோபாயம் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் குடும்பத் தலைவர் தெரிவிக்கும் அதேவேலை குடிநீருக்கு அருகாமையில் உள்ள வீட்டில் இருந்தே குழாய் நீர் கிடைக்கப்பெறுவதுடன் மின்சார வசதியும் நிரந்தரமாக இன்மை பெரும் மனவேதனை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால நல்லாட்சி அரசாங்கத்தினால் தம்பலகாமப் பிரதேச செயலகப் பிரிவில் பல வீட்டுத் திட்டங்களை அரசாங்கம் உருவாக்கியிருந்தபோதும் தங்களை மாத்திரம் புறக்கணித்தது ஏனோ தெரியவில்லை என்றும் அங்கலாய்க்கின்றனர்.
தற்போதைய கோடை கால கால நிலை மாற்றம் காரணமாக இக் குடியிருப்பில் இருக்க முடியாது தவிக்கின்றனர். நவீன இக் கால கட்டத்தில் தகரக் கொட்டிலில் நாம் எவ்வாறு வாழ்க்கை நடாத்துவது என தங்களை தாங்களே கேள்வி எழுப்பும் குறித்த குடும்பம் மலசலகூட வசதியின்மை காரணமாக பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தங்களுக்கான நிரந்தர வீட்டு வசதி உட்பட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்