கொட்டகலை பகுதியில் மதுபான விற்பனைக்கடை உடைத்து கொள்ளை, விசாரணைகளை மேற்கொள்ளும் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் கைது…

அட்டன் கே.சுந்தரலிங்கம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர் பகுதியில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான விற்பனைக்கடை ஒன்றை இன்று அதிகாலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கடைக்கு சமீபமாக கசிப்பு தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கோடா உடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
இதேவேளை உடைக்கப்பட்ட மதுபானக்கடையில் இருந்து சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான வௌ;வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட சாராய போத்தல்களை எடுத்துச்சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பாக நுவரெலியாவில் உள்ள மோப்ப நாயினைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் குறித்த நாய் கொட்டகலை பிரதேச சபை வரை சென்று நின்றுவிட்டதனால் விசாரணைகளை மோப்ப நாய் மூலம் முன்னெடுக்க முடியவில்லை இதனால் குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினைக் கொண்டும் பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கலின் உதவியுடனும் திம்புளை பத்தனை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.