மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இடம்பெறவில்லை…
(க.கிஷாந்தன்)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இன்று (10.04.2020) நடைபெறவில்லை. மக்கள் வீடுகளில் இருந்தவாரே வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் முக்கியமான நாளாக புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளையும், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுகூரும் நாளாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வழமையாக இந்நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், தியானங்கள் நடைபெறும். மக்களும் பெருமளவில் பங்கேற்பார்கள். ஆனால், இந்நிலைமை இருக்கவில்லை.
சிலுவைப் பாதை வழிபாடு யாத்திரைகூட இடம்பெறவில்லை.
கருத்துக்களேதுமில்லை