தோட்டங்களிலிருந்து கிளிக் போக முடியாத 154 பேருக்கு வீடு வீடாக சென்று மருந்து விநியோகம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலினையடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் தோட்டங்களிலிருந்து கிளினிக் போக முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகஸ்த்தர்கள் மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை அம்பகமுவ சுகாதார பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

ஆம்பகமுவ பிரதேசத்திற்குட்பட்ட குயில்வத்தை, ஸ்ரதன், புரூட்ஹில், மாணிக்கவத்தை, வூட்லன்ட்,ரொசல்ல உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாதம்,தோறும் கண்டி, நாவலபிட்டி, அவிசாவலை உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு பல்வேறு நோய்களுக்காக நோயாளர்கள் கிளினிக்சென்று வந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இவர்கள் கிளினிக் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இவர்களுக்கு தேவையான மருந்துகளை இவர்களிமிருந்து கிளினிக் புத்தகத்தினை பெற்று  அருகிலுள்ள வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இன்று வட்டவலை வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொண்ட மருந்துகளை உரியவர்களிடம் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் ஒப்படைத்ததார்.
இதன் போது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 154 நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் ஒப்படைக்கப்பட்டதுடன் இல்லாத மருந்துகள் மருந்தகங்களில் (பாமசிகளில்) பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.