யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவன் கைது- கொரோனா சூழலில் நீதவான் விடுத்த உத்தரவு!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காரைநகரைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியை உல்லாசக் கடற்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவன் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் கடந்த மாத முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாணவியால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதற்கமைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.