கொரோனா தொற்றாளர் எவரும் இனங்காணப்படவில்லை!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் இனங்காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 133 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், இன்று ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் மொத்தமாக 50 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 7 பேர் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 224 பேர் வைரஸ் தொற்று சந்தேகத்தில் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்