சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்