பிரதேசசபை உறுப்பினரின் முயற்சியால் நயினாதீவுக்குக் குடிதண்ணீர் வசதி!

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நயினை மக்கள் சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வேலணை பிரதேசசபையால்  நேற்று நயினாதீவுக்கு 15000லீட்டர் (சாட்டி)குடிநீர்வளங்கப்பட்டது.

அத்துடன் புதிதாக நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கும் 500லீட்டர் குடிநீர் வளங்கப்பட்டதுடன் ஒவ்வொருவாரமும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது .

இச்செயற்பாட்டிற்கு வேலணை பிரதேசசபைமூலம் முயற்சி எடுத்த பிரதேசசபையின் கௌரவ உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் உதவி புரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் நயினைமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர் மேலும் குடிநீரை தொடர்ச்சியாக வாரத்தில் ஒருதடவை வளங்க நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்படுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.