பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கோவிட் 19 காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டபடி 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க முடியுமா என்பது நிச்சயமற்றது” என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பு தொடர்பாக சுகாதார அதிகாரிகளை கலந்தாலோசிக்க கல்வி அமைச்சு தற்போது முடிவு செய்துள்ளது.

இருப்பினும், கல்வி அமைச்சின் செயலாளர் கூறுகையில், பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது, ஏனெனில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை நாடு தொடர்ந்து கடுமையாக்குகிறது.” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.