கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வர் ஆலய அறங்காவலர் சபையினரின் கொரானா நிவாரணப்பணி
இலங்கையில் கொரானா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உலர் உணவுப் பொதிகள் மக்களுக்கு பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வர் ஆலய அறங்காவலர் சபையினரினால் கல்முனை 1.2.3 பகுதியைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட 108 குடும்பங்களுக்கு தலா 1500/= பெறுமதியான நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை