கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் !! தேவையுடையோர் மட்டும் தொடர்வு கொள்ளவும்…

தற்போதைய சூழ்நிலையில் சமைத்து உண்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமல் வறுமையில் உள்ளவர்களின் உண்மையான நிலைமையைக் கருதி, கத்தார்வாழ் சில இலங்கை அன்புள்ளம் கொண்ட சகோதரர்களின் தனிப்பட்ட அன்பளிப்பால் வழங்கப்பட்ட சில உலர் உணவுப்பொருட்களை (அரிசி, பருப்பு,
கடலை, சீனி, சோயா….) கத்தாரில் உள்ள நமது இலங்கை தூதரகத்துக்கு அன்பளிப்பு செய்துள்ளோம்.

உண்மையான தேவையுடையோர் மட்டும் தயவு செய்து நமது தூதரகத்தில் இவ் அன்பளிப்பு பொதியை பெற்றுக்கொள்ள முடியும்.

தேவையுடையோரின் பெயரையும், தொலைபேசி இலக்கத்தையும் எனக்கு அறியத்தந்தால் தூதரகத்தில் இருந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும். நீங்கள் இலகுவாக சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

தகவல் :-
அப்துல் அஸிஸ்
77700486

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.