BUDS Batti & UK அமைப்பினால் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் 474 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

BUDS Batti & UK அமைப்பின் அனுசரனையுடன் நேற்று 10 ஆம் திகதி உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்ட்டன. பெரியநீலாவணையிலுள்ள மூன்று தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள 474 குடும்பங்களுக்கு 474000 ரூபாய் நிதியில் 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டன.

பெரியநீலாவணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மினிசூராவளி ஏற்பட்டிருந்தபோது பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக இங்கு வருகை தந்த வட்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு நிருவாகிகள் இங்கு தரம் ஒன்று தொடக்கம் ஏழு வரையான மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்து நடாத்தி வருகின்றனர். இதற்கான வகுப்பறைகள் தளபாடங்கள் எட்டு ஆசிரியர்களுக்குமான வேதனங்கள் என அனைத்தையும் வடஸ் அமைப்பு பொறுப்பெடுத்து கடந்த 16 மாதங்களாக இலவச வகுப்பையும் நடாத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலவச வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட இங்கு வசிக்கும் மூன்று தொடர்மாடி குடும்பங்களுக்கும் இந்த உதவியினை செய்துள்ளனர். இதில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கிராம சேவை உத்தியோகத்தர் கேதீஸ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தருமலிங்கம் அனர்த்த முகாமைத்துவ உத்தியேதாகத்தர் வட்ஸ் மாலை நேர வகுப்பு இணைப்பாளர் கு.கோகுலன் ஆகியோர் பங்குபற்றி நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.