பல விமர்சனங்களை தாண்டி இந்த சேவையை செய்கின்றோம்-கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக வாழ்வாதரங்களை இழந்த   புதிகாக சமூர்த்தியில் இணைக்கப்பட்ட 51 பயனாளிகளுக்கு நற்பிட்டிமுனையில்  ரூபா  5000 கொடுப்பனவு  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது  நற்பிட்டிமுனை மருதமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர்  எம்.எம்.எம்முபீன் தலைமையில் சனிக்கிழமை(11) மாலை 6 மணியளவில் இடம்பெற்றதுடன் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் ,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், சமூர்த்தி கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  எம். ஜௌபர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது  புதிகாக சமூர்த்தியில் இணைக்கப்பட்ட 51 பயனாளிகளுக்கு தலா 5000 வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பல விமர்சனங்களை தாண்டி  இந்த சேவையை செய்கின்றோம்.அண்மைக்காலமாக எமது அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே சமூர்த்தி பெறுவோர்இ சமூர்த்தி பெற தகுதியுடையோர், அங்கவீனர்கள் இநோயுற்றோர்,  அரசினால் தலா 5000 வழங்கப்பட்டு வருவதோடு தொழிற் பாதிப்புற்ற மக்களது  தகவல் திரட்டப்பட்டு வருகின்றது அவர்களுக்கு அரசாங்கம் நிச்சயம் வழங்கி வைக்கும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.