பெண் தாதிய உத்தியோகத்தரின் மாலையை பறித்து சென்றவரை தேடி வேட்டை

பாறுக் ஷிஹான்

உறங்கிக்கொண்டிருந்த பெண் தாதிய உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை அறுத்து சென்றவரை  பொலிஸார் தேடி வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை(10) நள்ளிரவு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் தங்கியுள்ள பகுதிக்கு சென்ற இனந்தெரியாத நபரால் தங்கமாலை அறித்து செல்லப்பட்டதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனடிப்படையில் செயற்பட்ட கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை(11) பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் வைத்திய சாலை சூழலில் தொடர் தேடுதலை மேற்கொண்டனர்.

அத்துடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்ட பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் 29 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் கைது செய்து அழைத்து சென்ற நபரை ஆளடையாளப்படுத்த முற்படுத்திய போது சந்தேக நபரது முகச்சாயல் மேற்குறித்த சிசிடிவி காணோளி மற்றும் பாதிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தரது முறைப்பாட்டுடன் பொருந்தவில்லை.

இதனால் கைதான சந்தேக நபர் விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.இவ்வாறு கைதான நபர் சற்று சித்த சுவாதீனமற்றவராக காணப்படுபவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் தொடர்ச்சியாக  கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர் விட்டுச்சென்ற தடயப்பொருட்களை  சான்று பொருட்களை முன்வைத்து தொடர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.