அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 198 இலிருந்து 199ஆக உயர்ந்துள்ளது.

குறித்த பெண் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுடன் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட நபரின் மனைவியாவார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் அண்மையில் கட்டார் சென்று வந்திருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த அவரின் மனைவிக்கும் தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.