இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்
இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ள நிலையில் அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இராணுவத்தினரின் பணிகளை பாராட்டும் வகையில் குறிதத் விஜயம்இன்று மேற்கொள் ளப்பட்டுள்ளது. இன்று காலை மாங்குளம் பகுதிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி இராணுவவ தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
புத்தாண்டு விடுமுறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக படையினர் நீண்ட காலமாக வீடுகளிற்கு விடுமுறையில் செல்லாது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றமையை பாராட்டும் வகையிலும், அவர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கும் அவர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கிளிநொச்சி விஜயத்தினை முடித்த அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




கருத்துக்களேதுமில்லை