கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் (வயது-45) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

உயிரிழந்து குறித்த நபர் கடந்த வெள்ளிக்கழமை வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.