இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானோரை பார்வையிட்டார் சிறீதரன்
இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த 2 ஆம்(02.04.2020) திகதியிலும் 7ஆம் (07.04.2020) திகதியிலும் அனுமதியுடன் கிராஞ்சியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீது மதுபோதையில் இருந்த இலங்கை கடற்படையினர் தாக்குதலை நடாத்தியதோடு அடித்தும் கடித்தும் இருந்தனர்.
கிராஞ்சிப்பகுதியைச் சேர்ந்தவர்களான செல்வராசா செல்வகுமார் 30 வயது அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பத்திநாதன் யூலி, பத்திநாதன் இன்பராஜ் ஆகியோர்களே தாக்குதலுக்கு உள்ளானவர்கள்
இவர்களில் 2ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகி கையில் படுகாயமடைந்த செல்வகுமார் என்பவர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும்தான் அனுமதியுடனேயே தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கடற்படை முகாமில் இருந்த கட்டளை அதிகாரி உட்பட நான்கு பேர் தன்னை தாக்கியதாகவும் தாக்கும் போது படையினர் மது போதையில் இருந்ததாகவும் தான் தாக்கப்பட்டதற்கான காரணத்தை இன்றுவரை தான் அறிந்திருக்கவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை