மறைந்த அன்ரனி ஜெயநாதன் அவர்களின் நினைவாக 755 உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் உணவு பொதிகள் இரண்டு கடடங்களாக வழங்கி வைக்கப்பட்டன
தற்போது தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளதினால் பல பகுதியில் அன்றாடம் மக்கள்  பெரும்  கஸ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.
இவற்றை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 28.03.2020, 31.03.2020 திகதிகளில் விசேட தேவை உடையோருக்கு இரண்டு இலட்ஷத்தி ஏழுபதாயிரம் ரூபாய்  (270000.00) பெறுமதியான உலர் உணவு (அரிசி,சீனி,பருப்பு, தேயிலை, சோயா, கருவாடு, தேங்காய் powder,  உப்பு, ) பொதிகளை 225 குடும்பங்களுக்கு வழங்கி வைத்திருந்தனர்.
இரண்டாம் கட்டமாக 02.04.2020 தொடக்கம் 08.04.2020 வரை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட் கிராமங்களில் தெரிவு செயப்பட்ட 485 குடும்பங்களுக்கு ஐந்து இலட்ஷத்தி முப்பத்தி மூவயிரத்து ஐநூறு ரூபாய் (533500.00)  பெறுமதியான உலர் உணவு (பிஸ்கட்) பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் 45 குடும்பத்துக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் (50000.00) பெறுமதியான உலர் உணவு (பிஸ்கட்) பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் எட்டு இலட்ஷத்தி ஐம்பத்தி மூவயிரத்து ஐநூறு ருபாய் (853500.00) நிதி பங்களிப்பில் 755 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இரண்டு கட்டங்களாக வழங்கி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கட்டமாக துணுக்காய், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் பிரதேசங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளதுடன் நான்காம் கட்டமா கிழக்கு நோக்கியும் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
இவ் உலர் உணவு பொதிகளை அன்ரனி ஜெயநாதன் அவர்களின் மகன் பீற்றர் இளஞ்செழியன்  சமூக சேவையாளர் லவன் , கஜானந்தன் , கஜன், பஞ்சன், ஜனமேந், குகன் ஆகியோர் மக்களின் கரங்களில் பொதிகளை கொன்று சேர்ந்தனர்.
மேற்படி பொதிகளை  மாவட்ட மேலதிக செயலாளரின் அனுமதியுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம சேவகர்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.