ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்…

ஒன்ராறியோ அரசாங்கம் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து 14,000 க்கும் மேற்பட்ட கைச்சுத்திகரிப்பு திரவம், நோய்க்காப்பு உடைகள், நோய்க்காப்பு முகக்கவசங்கள், தொற்றுநோய் பரிசோதனைக் கருவிகள் மற்றும் மூச்சியக்கி இயந்திரங்கள் (ventilators) போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான சமர்ப்பணங்களைப் பெற்றுள்ளது.

7,500 க்கும் மேற்பட்ட அவசரகால வழங்கல்களுக்கான சமர்ப்பணங்களின் மூலம், கொவிட்-19 நோய்த்தொற்றை முறியடிப்பதற்குத் தேவையான ஏறக்குறைய 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பின்வரும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன:

– 5.1 மில்லியன் கையுறைகள்

– 20 மில்லியன் முகமூடிகள்

– 250,000 முகப் பாதுகாப்புக் கவசங்கள்

– 50,000 ஒன்ராறியோ காவற்றுறையினருக்கான கைச்சுத்திகரிப்பு திரவங்கள்.

ஒன்ராறியோவிலுள்ள வணிகங்கள் நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை மீளுருவாக்கிக் கொள்ளவும், அவற்றுக்கான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் ‘ஒன்ராறியோ டுகெதர்’ எனும் 50 மில்லியன் நிதியத்தினை ஒன்ராறியோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது (Ontario.ca/OntarioTogether).

ஒன்ராறியோ அரசானது, நோய்த்தொற்றினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நோய்ப்பரம்பலைத் தடுக்கும் வகையில் கொவிட்-19 சோதனையை கணிசமானளவில் மேம்படுத்தியுள்ளதுடன் அதனை பல பாகங்களுக்கும் விரிவுபடுத்துகிறது.

இச்சோதனையின்போது மருத்துவமனை உள்நோயாளர்கள், நீண்ட கால பராமரிப்பு மையங்களில் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள், மற்றும் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் என அடையாளம் காணப்பட்டோர் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

ஒரே நாள் சோதனை முடிவுகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதுடன், இணையவழி மூலமாக நோயாளிகள் மதிப்பீட்டு முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன (Ontario.ca/coronavirus).

சுகாதார நிபுணரின் அறிவுறுத்தலுக்கமைய ஒருவர் தனது நோய்த்தொற்றுக்கான சோதனையினை செய்வதற்கு ஏதுவாக ஒன்ராறியோ முழுவதும் ஏறத்தாழ 100 கொவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.