சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமையில்! – முழங்காவில் கடற்படை முகாமுக்கு அனுப்பிவைப்பு…

ராகம மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார், முழங்காவில்  கடற்படை முகாமில் உள்ள  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராகமை வைத்தியசாலை எனக் கூறப்படும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும், வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக முழங்காவில் முகாமுக்கு அனுப்பப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

ஜா – எல, சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த ராகம போதனா வைத்தியசாலையின் ஊழியர் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.