தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து மேலும் 60 பேர் வீடு இன்று திரும்பினர்!


கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மேலும் 60 பேர்  இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் 15 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, பண்டாரகம பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனைத் தவிர, நீர்கொழும்பு வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் 25 பேரும் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று மொத்தமாக 60 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய மத்திய மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட்  ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் இதுவரையான காலத்துக்குள் 5 ஆயிரத்து 60 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யப்பட்டனர் எனவும், இவர்களில் 31 பேர் வௌிநாட்டவர்கள் எனவும்  இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மூவாயிரத்து 56 பேர், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்