ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பனுக்கு நிர்ணய விலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 125 ரூபாயினை நிர்ணயிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 115 ரூபாய் நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம், அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து கலந்துரையாடியதன் பின்னர் இந்தக் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு அரிசி வகைகளின் விலை ஒரு கிலோ கிராம் 140 தொடக்கம் 145 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.