சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

 
“நாட்டில் கொரோனா வைரஸால் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, நாம் ஒவ்வொருவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குப் பொறுப்புடன் செயற்படவேண்டும். இல்லையேல் நாம் பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். பேரிழப்புக்களைக் கூடச் சந்திக்க வேண்டி வரும்.”

– இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டு மக்கள் தமிழ் – சிங்களப் புத்தாண்டில் பொறுப்புடன் செயற்பட்டு, நாடு எதிர்நோக்கியுள்ள அபாயத்தைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொறுப்புடன் ஒவ்வொருவரும் செயற்படும் பட்சத்தில் கொரொனா வைரஸ் பிடியில் இருந்து விடுபட்டு பிரச்சினை இல்லாமல் எதிர்காலத்தில் பயணிக்க முடியும்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மிக முக்கிய பொறுப்பு பொதுமக்களிடம் இருக்கின்றது.

எனவே, தீர்மானமிக்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும். இல்லையேல் நாம் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.