ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு!

கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில், இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்களுக்கு இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 426 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.