கரைச்சி பிரதேச சபையின் ஊழியர்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு
தற்போது உலகையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேற்கொள்ளும் கரைச்சி பிரதேச சபையின் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் முகமாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக சேவையாளன் SK நாதன் அவர்களினால் ஊழியர்களுக்கு வழங்குமாறு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது. அவற்றை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் ஊழியர்களுக்கு வழங்கி வைத்தார்.
கருத்துக்களேதுமில்லை