கனடா செந்தில் குமரன் அமைப்பு 600 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுகின்ற நிலைமையில் தினக்கூலி செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய மக்களிற்கு தமது அன்றாட சீவியத்தை போக்குவதற்கான வழிதெரியாமல் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலைமையை கருத்தில்கொண்டு கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கனடாவில் உள்ள செந்தில்குமரன் நிவாரண நிதியம் என்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் திரு செந்தில்குமரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த நிலைமையை தொலைபேசி ஊடாக விளக்கியுள்ளார்.
நிலைமையை உணர்ந்த செந்தில்குமார் நிவாரண நிதியத்தின் பணிப்பாளர் உடனடியாக கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு தினக்கூலி மேற்கொள்ளும் 600 குடும்பங்களைத் தேர்வுசெய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1350 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து குறித்த பொருட்கள் பச்சிலைப்பள்ளி, பூநகரி மற்றும் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கும் தொண்டர்களின் மூலம் நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினுடைய பணிப்பாளர் செந்தில்குமரன்  தாயகத்தில் தமது வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் பாரிய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பண உதவிகள் போன்றவை கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பண உதவிகள், கடந்த நான்கு வருடங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கபட்டு அவதியுறும் நோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவ சேவை என்று பல உதவிகளை காலத்தின் தேவை அறிந்து புலம்பேர் மக்களின் துணையோடு நிறைவேற்றி வருகின்றார்.
இந் நிறுவனத்திற்கு தாயக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் செந்தில்குமரனுக்கு உதவிகளை வழங்கி வருகின்ற கனடா புலம்பெயர் சமூகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.