பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் போதுமானவையல்ல – ஐக்கிய தேசியக் கட்சி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பொதுமக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நடைமுறையில் செயற்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றார்.
நீண்ட நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதனால் மக்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகவும் 5,000 ரூபாய் உதவி ஒதுக்கீடு செய்துள்ளது என அரசாங்கம் அறிவித்தது ஆனால் இதுபோன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த முயற்சிகள் இன்னும் கிராமப்புற மக்களை அடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் அரசியல் பொறிமுறையின் கீழ், சட்டத்தை மீறும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அகில விராஜ் காரியவசம் குற்றம் சாட்டினார்.
மேலும் பிரதேச செயலாளர்கள் முதல் கிராம சேவகர் அதிகாரிகள் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளின் ஆதரவையும் ஒப்புதலையும் கொண்டு, மக்களுக்கு நிவாரண உதவித் திட்டங்களை அரசாங்கம் நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் இன்னும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறவில்லை அதே சமயம் சலுகைகள் உள்ளவர்களுக்கே தொடர்ந்தும் இந்த உதவிகள் சென்றடைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை