உயிர்க் கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெறுவோம்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மாவை

அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள், கோவிட்-19 உயிர்க் கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சார்வரி தமிழ் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தியில், “சார்வரி புத்தாண்டு பிறந்துள்ளது. அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் கோவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள், எழுந்து நில்லுங்கள்!

அறுகு, துளசி,வேம்பிலையுடன் மஞ்சள் கலந்து நன்றே நீராடுங்கள், நம்பிக்கையுடன் தெய்வங்களை வழிபட்டு இறைபணி செய்யுங்கள்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.