வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ஒதுக்கீடு!

வவுனியா மாவட்ட மக்களுக்க நிவாரணம் வழங்குவதற்காக 205.51 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், “தற்போதைய நிலையில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது. அதனூடாக வவுனியா மாவட்டத்தில் பல நிவாரணத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரச உத்தியோகத்தர்கள் தமது சிரமத்தையும் பார்க்காது மக்களுக்கான பணியை முன்னேடுத்துள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக சமுர்த்தி நிவாரணத்திற்காக 147.83 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் விவசாயக் காப்புறுதி உட்பட ஏனைய நிவாரணங்களுக்காகவும் மிகுதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்