குடும்பத் தகராறில் ஒருவர் படுகொலை – ஐவர் பொலிஸாரால் கைது

கெப்பித்திகொல்லாவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப்பித்திகொல்லாவ, இகிரிகொல்லேவ, கோனுகத்தனாவ பகுதியிலேயே நேற்றிரவு (13) இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, கூரிய ஆயுதமொன்றினால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர்,  கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

இக்கொலையைப் புரிந்த பிரதான சந்தேகநபர் உட்பட 05 பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்