திருமலை விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (13) மாலை கடமையை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு சென்றபோது லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்  ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்