சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இருட்டு வட்டத்தின் மற்றுமொரு உதவி!
-ஐ.எல்.எம் நாஸிம்-
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்திரைகள் வழங்குவதற்காக இருபது ஆயிரம் (20,000) பக்கெட்டுகளை சம்மாந்துறை இருட்டு வட்ட அமைப்பினர் இன்று(14) அன்பளிப்பு செய்தனர்.
அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லாபிரினால் சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத்.எம் ஹனீபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் இருட்டு வட்ட அமைப்பினர் வைத்திய சாலை உத்தியோகர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இருட்டு வட்ட அமைப்பு இக் காலப்பகுதியில் பல உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை