கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக வேலையிழந்த 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ஓரிரு தினங்களில் நிவாரணம்…

நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கும் காரணமாக இன்று பலர் வேலை இழந்துள்ளனர். அவ்வாறு வேலை இழந்து செய்வதறியாது உள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் ஓரிருதினங்களில் 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக
நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தெரிவித்தார்.

கொட்டகலை வர்த்தகம் சங்கம் பொது மக்களுக்கு நிர்னைய விலையில் பொருட்கள் பெற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையால் ஒன்று இன்று (14) ம் திகதி நுவரெலியா மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில்  கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..நுவரெலியா மாவட்டத்தினை பொருத்த வரையில் 52 ஆயிரம் சமூரத்தி குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண அடிப்படையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன். சமூரத்தி கொடுப்பனவு விண்ணப்பித்து பெற முடியாது காத்திருப்பு பட்டியலில் இருந்த மேலும் 21 ம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதே போன்று முதியோர் கொடுப்பனவு,நோயாளர் கொடுப்பனவு என அனைத்தினையும் நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

எங்களுக்கு தற்போது கொடுக்க இருப்பது கொரோனா தாக்கம் காரணமாக வேலையிழந்து செய்வதறியாதிருக்கின்ற 61 குடும்பங்களுக்கே இதனை வழங்கி விட்டால் தற்போது ஊர்களிலும் தோட்டங்களிலும் நிவாரணம் இல்லை என்று கூச்சலிடுகின்றவர்கள் சத்தம் அமர்ந்து விடும்.
இன்று எமக்குள்ள மற்றுமொரு பிரச்சினைதான் தோட்டத்தொழிலாளரக்ளுக்கு நிவாணம் பெற்றுக்கொடுப்பது இன்று தோட்டங்களை பொறுத்தவரையில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

தொழிற்சாலைகள் இயங்குகின்றன.ஆகவே அவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களுக்கு சலுகை கடன் அடிப்படையில் அறவிட்டுக்கொள்வதற்கமை தற்போது ஒரு தடைவைக்கு 3000 ரூபா வீதம் மாதம் மூன்று முறை வழங்கப்பட்டு வருகின்றன ஆகவே இவர்களுக்கும் மாதம் 9000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் கிடைக்கின்றன.
இதற்கு கம்பனிகளிடமிருந்து 75 மில்லியன் ரூபாவும் அரசாங்த்திடமிருந்து 75 மிலலியன் ரூபாவும் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை கொட்டகலை வர்த்தகம் சங்கம். முன் வைத்த கோரிக்கைக்கு மொத்த விற்பனை நிலையங்களிருந்தும் உற்பத்தியாளர்களிடமிருந்தும் நேரடியாக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் அது நிறைவேறியவுடன் வர்த்தகர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் அப்போது பொது மக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும். அத்துடன் குறிப்பிட்ட விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் சட்ட நடவடிக்கை எடுத்தள்ளதாகவும் கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்