வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் படுகாயம்
வவுனியாநிருபர்
வவுனிய, பூவரசங்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூவரசங்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முதியவர் ஓருவரும் 26 வயதுடைய இளைஞர் ஓருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த முதியவர் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு இடம்மாற்றபட்டுள்ளதுடன் அவரின் நிலமை கவலைக்கிடமான நிலையில் காணப்படுகின்றது.


கருத்துக்களேதுமில்லை