பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதி காணும் புத்தாண்டு கொண்டாங்கள்

வவுனியாநிருபர்

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டு கொண்டாங்கள் பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதியான முறையில் காணப்படுகின்றது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. வவுனியா உட்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும் புத்தாண்டு தினத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் என்ற நோக்கில் அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா முழுவதும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதுடன் வெடிச்சத்தங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் காணப்படுகின்றது.

நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்தில் இவ்வாறான நிலை காணப்பட்டிருந்ததுடன் தற்போது பல வருடங்களின் பின்னர் கொரனா தொற்று காரணமாக இன்று இவ்வாறான நிலையில் காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.