ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் – யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் உதவி

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாகவும், நோய் பரவுதலைக்கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றாட உழைப்பாளிகள் கூலி வேலை செய்வோர் மற்றும்பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் அன்றாட தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன் அன்றாட உணவுக்கும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினரான ப.தர்சானந் இடம் வட்டார மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப்பொருட்களை செரெண்டிப் நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இன்று 14.04.2020 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் யாழ்.ஆத்திசூடி கலைமகள் சனசமூக நிலையத்தில், அதன் தலைவர் இராஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி உலருணவுப்பொருட்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந், வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேசசபையின் தவிசாளர் க.தர்ஷன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், செரண்டிப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அ.கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.