வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்த தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.

குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.