கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இருளில் இருந்த வீதி ஒன்றிற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கை…

கொரோனா வைரஸ் இச்சுறுத்தல் காரணமாக இருளில் இருந்த வீதி ஒன்றிற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அம்மன் கோவில் வீதி கடந்த காலங்களாக இருளில் மூழ்கிக் காணப்பட்டது.
அத்துடன் இவ்வீதியில் இருமருங்கிலும் யாசகம் செய்வோர் தங்கி இருந்து யாசகம் செய்த பின்னர்  தற்காலிகமாக தங்கி வாழ்ந்தனர்.

இருந்த போதிலும் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டமையினால்  மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அவ்வீதியின் ஊடாக பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.மேலும் அம்மன் கோவில் நிர்வாகம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சுமார் பிரகாசமுள்ள 8 சோடி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு அப்பகுதியில் இருந்த இருள் நீக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்காரணமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அம்மன் கோவில் வீதி இருளடைந்து காணப்பட்டது.எனினும் குறித்த வீதியில் மனிகுமிழை பொருத்தி அப்பகுதியை ஒளியேற்றுமாறு எமது மாநகர சபை அசமந்த போக்கில் இருந்தது.இதனால் எனது பங்களிப்பின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்தேன்.ஏனைய அரசியல் வாதிகள் மக்களின் அதிகளவான பிரச்சினைகளை கண்டு கொள்ளாது வீடுகளில் உறங்கி கிடக்கின்றனர்.அத்துடன் சேவை செய்யும் அரசியல் வாதிககளுக்கு போலி முகநூலில் விமர்சனமும் அவதூறும் தான் நன்றியாக உள்ளது என வேதனையுடன்  தெரிவித்தார்.


 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.