உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம்…

(க.கிஷாந்தன்)

ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி சுமார் 450 குடும்பங்களுக்கு 3500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மா, பால்மா, பருப்பு, டின்மீன்,  தேங்காய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டிக்கோயா பள்ளிவாசல் சமூகத்தின் நிதி உதவியுடனேயே இந்த நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.