காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவி…
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவியானது இன்று காரைதீவில் உள்ள 300 குடும்பங்களுக்கு 1000/= பெறுமதியான கூப்பன் வழங்குவதற்காக காரைதீவு பிரதேச செயலாளரிடம் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்ம கர்த்தாக்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் இக் கூப்பனை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கூப்பனைக் கொண்டு உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள் மலிவான இடத்தினை தெரிவு செய்து காரைதீவில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள முடியும் என காரைதீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது விடயம் சம்பந்தமாக யாதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 067-2220166, 077-9338271
கருத்துக்களேதுமில்லை