கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 குடும்பங்களுக்கு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்களத்தின் ஏட்பாட்டில் சமூக நேயப்பணி….

கொரோனா வைரஸ் (Covid 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய, பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் தனவந்தர்கள் அனைவரும் ஒன்றிணைத்து இன்றைய தினம் (15) மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இவ் சமூக நேய பணிக்காக சகல வழிகளிலும் ஒத்தாசை வழங்கிய பிரதேச செயலாளர். நற்பிட்டிமுனை 1,2,3 மற்றும் கல்முனை-IA இற்கு பொறுப்பான அனைத்து கிராம் சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஸ்ரீ கணேசராலய, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் நன்கொடையாளிகள் அனைவருக்கும் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினர் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்